பிறந்தநாள் கேக்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஊசிகள்! முகத்தை அழுத்திய இளம்பெண் படுகாயம்... பகீர் வீடியோ!
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விளையாட்டாகச் செய்யப்பட்ட செயல், பெண் ஒருவருக்கு காயத்தை ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேக்கிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூர்மையான ஊசிகள் முகத்தில் குத்தியதால் அந்தப் பெண் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
Eli estaba celebrando su cumpleaños cuando sus amigos supuestamente le empujaron la cara contra su pastel mientras ella apagaba las velas. Pero jeringas ocultas dentro del pastel le perforaron la cara, convirtiendo la celebración en una pesadilla. https://t.co/Vt4d6a0vG4
— Adel El Zabayar (@Zabayar) October 29, 2026
பிறந்தநாள் விழாவில் பெண் ஒருவர் கேக் வெட்டத் தயாராக இருந்தபோது, அருகில் இருந்த தோழிகள் விளையாட்டாக அவரது தலையைப் பிடித்து கேக்கில் அழுத்தியுள்ளனர். அப்போது கேக்கின் உட்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிரிஞ்ச் ஊசிகள் அவரது முகத்தில் குத்தியதாக செய்தி தெரிவிக்கிறது.
இதனால் அந்தப் பெண் வலியால் துடித்ததுடன், அங்கிருந்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சம்பவம் எந்த இடத்தில் நடைபெற்றது, பெண்ணுக்கு ஏற்பட்ட காயத்தின் தீவிரம் என்ன, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாரா என்பது குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஒருவரின் முகத்தை வலுக்கட்டாயமாக கேக்கில் அழுத்தும் பழக்கம் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இதுபோன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
