பஞ்சாப் முதலமைச்சர் மீது ரூ.5 கோடி லஞ்சப் புகார் - பாஜக குற்றச்சாட்டு!
பாலியல் தொடர்பான வழக்குகளை முடித்து வைப்பதற்காகப் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சிங்கின் மனைவி மற்றும் இடைத்தரகர்கள் தரப்பில் ரூ.5 கோடி வரை பேரம் பேசப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதா கட்சி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பந்தாரி செய்தியாளர்களைச் சந்தித்து, இந்த ஊழல் பேரத்தில் இடைத்தரகர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஆடியோ பதிவை ஆதாரத்திற்காக வெளியிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சிங், அவரது மனைவி மற்றும் டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்குத் நேரடித் தொடர்பு இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
முதலமைச்சர் அலுவலகம் முறையான நிர்வாகப் பணிகளை விடுத்து, இது போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் ஊழல் சிண்டிகேட்டாக மாறிவிட்டதாக பாஜக தரப்பில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
