அண்ணாமலை கண் எதிரே பாஜக பிரச்சாரத்தில் தொண்டர்களிடையே கைகலப்பு.. தடியடி நடத்திய போலீசார்!

 
பாஜக பிரச்சாரம்

லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து, 10 தொகுதிகளில், பா.ம.க, போட்டியிடுகிறது. கடலூர் தொகுதியில் இயக்குநரும், நடிகருமான தங்கர்பச்சான் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதையடுத்து தொகுதியின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்குப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று கடலூர் வந்தார்.

கடலூர் முத்துநகர் பகுதியில் திரண்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் மத்தியில் தங்கர் பச்சானுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அப்போது, அண்ணாமலை, மத்திய அரசின் சாதனைகளை முன்வைத்து, தங்கர் பச்சானை வெற்றி பெறச் செய்ய வலியுறுத்தினார். பிரதமர் குறிப்பிட்டுள்ள 400 எம்.பி.க்களில் தங்கர் பச்சனும் ஒருவர் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக இளைஞர்கள் சிலர் அண்ணாமலை முன்பாக முண்டியடித்து நிற்க முயன்றனர். அப்போது கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கூட்டத்தில் நின்ற இரு தரப்பு இளைஞர்களும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதைப் பார்த்த போலீஸார் உடனடியாக அவர்களைத் தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர். இதையடுத்து 4 பேரையும் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் பிரசார கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web