மோடியின் ஆசீர்வாதத்தில் வெற்றி பெறுவேன்... வேட்பாளர் நடிகை கங்கணா ரணாவத் சூளுரை!

 
கங்கணா ரனாவத்

 இந்தியாவில் மக்களவை தேர்தல் காரணமாக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆளும் கட்சியான பாஜக 3 வது முறை ஆட்சியை பிடிக்க பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்கள், திரை நட்சத்திரங்களை களம் இறக்கியுள்ளது. அந்த வகையில்  5-ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி தொகுதி வேட்பாளராக கங்கனா ரணாவத் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர்   மாண்டியில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினரோடு ஹோலி பண்டிகையைக் கொண்டாடிய  பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.


இதில்  “பாஜக வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இமாச்சலைச் சேர்ந்த பாஜக தலைவர் ஜெ.பி நட்டா, மாநிலத்தின் மூத்த தலைவர்களான அனுராக் தாக்குர், ஜெய்ராம் ரமேஷ் ஆகியோருக்கு எனது நன்றிகள். மோடியின் ஆசிர்வாதத்துடன் தேர்தலை எதிர்கொள்வேன். பாஜகவின் எளிய தொண்டராக நான் கட்சியில் இணைந்த நான் கட்சியின் சொல்படி நடப்பேன் 
நான் வெற்றி பெற்றால் மக்களுக்காக சேவை செய்வேன். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ஸின் கலாச்சாரமே ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பாக இருப்பது தான். எனது செயல்பாடும் அதனை பொறுத்தே இருக்கும்.   மாண்டி தொகுதியின் ஒவ்வொரு கிராமத்துக்கும் செல்வேன்.  இந்தியா முழுவதும் 400 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் பாஜகவின் இலக்கு இதற்காக பாடுபடுவேன்.

கங்கணா ரணாவத்
உலகின் மிகவும் நேசிக்கக் கூடிய தலைவராக பிரதமர் மோடி உள்ளார். அவரது அடிச்சுவட்டை பின்பற்றி நாங்கள் நடப்போம். பிரதமர் மோடியின் திட்டம்தான் எங்கள் திட்டம். ஒரு படை வீரரைப் போல் நாங்கள் அவருக்கு உறுதுணையாக இருப்போம். நாங்கள் வெற்றி பெறப்போவது உறுதி.  பாஜகவுக்கு நான் எப்போதுமே நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவேன்.  நான் பிறந்த தொகுதியிலேயே கட்சி என்னை வேட்பாளராக நிறுத்தி உள்ளது. கட்சியில் அதிகாரபூர்வமாக இணைந்திருப்பதன் மூலம் பெருமையாக உணர்கிறேன். நல்ல தொண்டராகவும், நம்பகமான பொதுநலப் பணியாளராகவும் இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்” என கங்கனா தெரிவித்துள்ளார்.   

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web