பாஜக கவுன்சிலர் தற்கொலை முயற்சி - மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு!

 
உபி பாஜக கவுன்சிலர்

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், தனது வார்டுக்கு உட்பட்ட வளர்ச்சித் திட்டங்களின் கோப்புகளை அதிகாரிகள் முடக்கி வைப்பதாகக் குற்றம்சாட்டி, மாநகராட்சி அலுவலகத்திலேயே பாஜக கவுன்சிலர் ஒருவர் கையை அறுத்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு கவுன்சிலரான பவன் குப்தா (பாஜக), தனது வார்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சித் திட்டங்களுக்கான கோப்புகள் நீண்ட நாட்களாக அதிகாரிகளால் முடக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டி வந்தார்.

உபி பாஜக கவுன்சிலர்

இது தொடர்பாகக் கான்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் தலைமைப் பொறியாளருடன்  பவன் குப்தா தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரமடைந்த அவர், திடீரெனத் தான் வைத்திருந்த கத்தியால் தன் கையை அறுத்துத் தற்கொலைக்கு முயன்றார்.

மாநகராட்சி அலுவலக வளாகத்திலேயே கவுன்சிலர் கையை அறுக்க முயன்றதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக கவுன்சிலர்கள் மற்றும் ஊழியர்கள், உடனடியாக ஓடிவந்து அவரைத் தடுத்து நிறுத்தினர்.

உபி பாஜக கவுன்சிலர்

அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தத் தற்கொலை முயற்சிச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனது வார்டு மேம்பாட்டுப் பணிகளுக்காக மக்கள் பிரதிநிதி ஒருவர் மாநகராட்சி அலுவலகத்திலேயே தற்கொலைக்கு முயன்ற சம்பவம் உத்தரப் பிரதேச அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.