பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மீண்டும் கைது.. பழைய வழக்கில் நடவடிக்கை..!!

கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு நடத்திய செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக பல்வேறு இடங்களில் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. அதில், பேருந்து நிறுத்தங்களில் ஒட்டப்பட்ட விளம்பர போஸ்டரில் முதலமைச்சர் ஸ்டாலின் படம் மட்டுமே இருப்பதாகவும், பிரதமர் மோடியின் படம் இல்லை என அமர் பிரசாத் ரெட்டி குற்றம் சாட்டினார்.
இதனையடுத்து, பிரதமர் மோடியின் புகைப்படத்தை அந்த விளம்பரங்களில் ஒட்டினார். இதனால், முதல்வர் ஸ்டாலின் படத்தை அகற்றியதாக அவர் மீது கோட்டூர்புரம் பேலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தான் தற்போது அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார். இவரை அக்டோபர் 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன் நடந்த கலவரம் தொடர்பாக பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி கடந்த 21ஆம் தேதி கைதாகி, தற்போது நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான், மேலும் ஒரு வழக்கில் தற்போது கைதாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.