மேற்கு வங்காளத்தின் பெயரை ‘பஸ்சிம்பங்கா’ என மாற்ற பாஜக அரசு முடிவு!
Oct 7, 2026, 16:40 IST
மேற்கு வங்காள மாநிலத்தின் பெயரை ‘பஸ்சிம்பங்கா’ என அதிகாரப்பூர்வமாக மாற்ற முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக அரசு முடிவு செய்துள்ளது. வங்க மொழியில் ‘பஸ்சிம்’ என்றால் ‘மேற்கு’ என்றும், ‘பங்கா’ என்றால் ‘வங்காளம்’ என்றும் பொருள்படும்.

மாநிலத்தின் பெயரை மாற்றுவது தொடர்பான தீர்மானம் மற்றும் மசோதாவை அடுத்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்து நிறைவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த இந்த பெயர் மாற்ற நடவடிக்கையானது, மாநிலத்தின் கலாச்சார அடையாளத்தை மீட்டெடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
