பாஜக ஹெச்.ராஜா காரை வழிமறித்து மிரட்டிய தவெகவினர் - விழுப்புரத்தில் பரபரப்பு!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவின் காரை தேசிய நெடுஞ்சாலையில் பத்த கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று வழிமறித்த தவெகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவின் காரை, தவெகவினர் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவு வரை பின்தொடர்ந்து துரத்திச் சென்றுள்ளனர். எச்.ராஜாவின் காரை வழிமறித்த அவர்கள், தங்களை அவர் அவதூறாகத் திட்டியதாகக் கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாஜகவிலிருந்து விலகித் தவெக கட்சியில் இணைந்தவர்களை எச்.ராஜா கடுமையாக விமர்சித்துத் திட்டியதே இந்தக் ஆத்திரத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருவதுடன், இதுதொடர்பான கூடுதல் விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.
