பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் பெண்களை கேலி கிண்டல் செய்த பாஜகவினர்? - காவல்நிலையம் முற்றுகை !

 
மோடி

பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க நேற்று தமிழகம் வந்தார். அவரை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் நேரில் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிராமர் மோடி, இறுதியாக திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி பல்லாவரத்தில் நடைபெற்றது. 

இதில் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது மதுபோதையில் இருந்த சில பாஜகவினர், நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களை கேலி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பெண்களிடம் அத்துமீறிய கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பாஜகவினரை பல்லாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதில் சிறுவர்களும் இருந்ததாக கூறப்படுகிறது. 

மோடி

இந்த தகவலையடுத்து பாஜகவினர் பலரும் பல்லாவரம் காவல்நிலையத்தை முற்றுக்கையிட்டனர். அப்போது, சிறுவர்களை கைது செய்ததற்கான காரணத்தை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் போலீசார் சிறுவர்களை தாக்கியதாக குற்றம்சாட்டினர். தகவல் அறிந்து  வந்த தாம்பரம் துணை ஆணையர் அதிவீர பாண்டியனிடம் பாஜகவை சேர்ந்தவர்கள் முறையிட்டனர்.

மோடி

காவல் நிலையத்தில் சென்ற துணை ஆணையர் அதிவீர பாண்டியன், காவல் நிலையத்தில் இருந்த போலீசாரை வெளியேற்றினார். பின்னர் தானே விசாரணை நடத்திக் கொள்வதாக கூறிய அவர், பின்னர் பெண்களை கிண்டல் செய்ததாக பிடித்துவரப்பட்ட மூவரிடம் விசாரணை நடத்தினர். அதில் சிறுவர்களும் இருந்ததால் எச்சரித்து விடுவித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் காவல்நிலையம் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

From around the web