‘தலைவி’ பட நடிகை கங்கனா பாஜக வேட்பாளராக தேர்தலில் போட்டி!

 
ஜெயலலிதா கங்கனா

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான’தலைவி’ படத்தில் ஜெயலலிதாவாக நடித்த நடிகை கங்கனா, பாஜக வேட்பாளராக, நாடாளுமன்ற தேர்தலில் இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிட உள்ளார். 

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல்  தேதி அறிவிக்கப்பட்டது முதல்  தேர்தல் களம் பரபரப்படைந்துள்ளது. பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, அதிமுக உள்பட பல்வேறு கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஏற்கனவே 4 கட்டங்களாக வேட்பாளர்களை அறிவித்துள்ளது.  

கங்கனா ரனாவத்

 

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 5ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளராக களமிறங்க உள்ளார். கங்கனா இமாச்சலபிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கங்கனா ரணாவத், என் அன்புக்குரிய பாரதிய ஜனதா கட்சிக்கு எப்போதும் எனது நிபந்தனையற்ற ஆதரவு உண்டு. பாஜகவின் தேசியத் தலைமை, எனது பிறந்த இடமான இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் என்னை வேட்பாளராக அறிவித்திருக்கிறது. கட்சியில் அதிகாரபூர்வமாக இணைந்ததை பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். நான் ஒரு தகுதியான காரியகர்த்தாவாகவும், நம்பகமான மக்கள் சேவகியாகவும் செயல்பட ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். 

கங்கனா ரனாவத்

 பிரபல நடிகையான கங்கனா ரணாவத், நான்கு தேசிய விருதுகள், ஐந்து பிலிம்பேர் விருதுகள் பெற்றவர். போர்ப்ஸ் இந்தியாவின் பிரபலமான 100 பேர் பட்டியலில் ஆறு முறை இடம் பெற்றவர். 2020-ம் ஆண்டு இவருக்கு ஒன்றிய அரசால் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. அன்மைக் காலமாக பாஜகவுக்கு ஆதரவான தீவிர கருத்துக்களை இவர் பேசி வந்ததால் இவரை  தற்போது பாஜக வேட்பாளராக  அறிவித்திருக்கிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web