சோனியா காந்தி குறித்த சர்ச்சைக்குரிய படம் - பாஜக வெளியிட்ட போஸ்டரால் புதிய சர்ச்சை!
சமூக வலைதளங்களில் தற்போது பரவிவரும் 1980-களின் ஏஐ புகைப்பட டிரெண்டை மையமாக வைத்து, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே புதிய மோதல் வெடித்துள்ளது.
சமூக வலைதளங்களில் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் பழைய காலத்து விண்டேஜ் புகைப்படங்களை உருவாக்கும் டிரெண்ட் பரவி வரும் நிலையில், இரு கட்சிகளும் தங்களின் சமூகப் பக்கங்களில் பல்வேறு படங்களைப் பகிர்ந்து வருகின்றன.

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் குஜராத் மாநிலப் பிரிவு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சர்ச்சைக்குரிய வகையில் சித்தரிக்கும் படத்தை வெளியிட்டது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடுமையான விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து அந்தப் படம் சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது. இருப்பினும், பாஜகவின் இந்த செயலுக்குக் காங்கிரஸ் தரப்பில் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
