பாஜகவின் 27 தொகுதி உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.. கவனிக்கத்தக்க மாற்றங்கள் என்னென்ன?!
அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 27 தொகுதிகளுக்கான உத்தேச வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் முக்கியத் தலைவர்கள் மற்றும் கடந்த முறை வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 27 இடங்களைப் பெற்றுள்ள பாஜக, தனது வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் போட்டியிட வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்த உத்தேசப் பட்டியல் கசிந்துள்ளது.
இந்த உத்தேசப் பட்டியலில் தமிழக பாஜகவின் முன்னணித் தலைவர்களுக்குப் பல்வேறு மாவட்டங்களில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது: முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் பாஜக போட்டியிடும் ஒரேயொடு தொகுதியான மயிலாப்பூரில் களம் இறங்குகிறார்.

பாஜகவின் தேசிய மகளிரணித் தலைவி வானதி சீனிவாசன் மீண்டும் கோவை வடக்கு தொகுதியிலேயே போட்டியிடுகிறார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தனது கோட்டையான நாகர்கோவிலில் போட்டியிடலாம். மத்திய அமைச்சர் எல். முருகன் அவிநாசி தொகுதியில் களம் காணக் கூடும். காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த விஜயதாரணி மீண்டும் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த முறை திருநெல்வேலியில் வென்ற மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு இந்த முறை சாத்தூர் தொகுதி ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. மாநிலச் செயலாளர் அமர்பிரசாத் ரெட்டி தளி தொகுதியில் போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மதுரை தெற்கு தொகுதியில் மாநிலப் பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் களம் இறங்கலாம். திருப்பூர் தெற்கு தொகுதியில் ஏ.பி. முருகானந்தம் போட்டியிட வாய்ப்பு அதிகம்.

கவனிக்கத்தக்க மாற்றங்கள்:
2021ல் பாஜக வென்ற 4 தொகுதிகளில், இந்த முறை 2 தொகுதிகள் மட்டுமே (நாகர்கோவில், மொடக்குறிச்சி) அக்கட்சிக்கு மீண்டும் கிடைத்துள்ளன. திருநெல்வேலி மற்றும் தாராபுரம் தொகுதிகள் அதிமுக வசமே உள்ளன. மேலும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த தொகுதிகளில் திருச்செந்தூர் மட்டுமே பாஜக வசம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாஜக உத்தேச வேட்பாளர் பட்டியல்:
-
அவிநாசி: எல். முருகன்
-
மயிலாப்பூர்: தமிழிசை சௌந்தரராஜன்
-
கோவை வடக்கு: வானதி சீனிவாசன்
-
நாகர்கோவில்: பொன் ராதாகிருஷ்ணன்
-
விளவங்கோடு: விஜயதாரணி
-
சாத்தூர்: நயினார் நாகேந்திரன்
-
தஞ்சாவூர்: கருப்பு முருகானந்தம்
-
திருவண்ணாமலை: அஸ்வத்தாமன்
-
ராமநாதபுரம்: ஜி.பி.எஸ். நாகேந்திரன்
