பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியானது... யார் யாருக்கு எந்த தொகுதி? முழு பட்டியல்!
வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், நீண்ட இழுபறிக்குப் பின் பாஜக தனது அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முன்னாள் ஆளுநர், மத்திய அமைச்சர் மற்றும் முக்கியத் தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
பாஜக வேட்பாளர்கள் மற்றும் தொகுதிகள்:
| வரிசை |
தொகுதி |
வேட்பாளர் பெயர் |
| 1 |
மயிலாப்பூர் |
Dr. தமிழிசை சௌந்தரராஜன் |
| 2 |
அவினாசி (SC) |
Dr. L. முருகன் (மத்திய அமைச்சர்) |
| 3 |
கோயம்புத்தூர் (வடக்கு) |
வானதி சீனிவாசன் |
| 4 |
சாத்தூர் |
நயினார் நாகேந்திரன் |
| 5 |
விளவங்கோடு |
S. விஜயதரணி |
| 6 |
நாகர்கோவில் |
M.R. காந்தி |
| 7 |
தஞ்சாவூர் |
M. முருகானந்தம் |
| 8 |
மதுரை தெற்கு |
பேராசிரியர் ராமா ஸ்ரீனிவாசன் |
| 9 |
ஆவடி |
M. ராஜசிம்ம மகேந்திரா |
| 10 |
தளி |
Dr. நாகேஷ் குமார் |
| 11 |
திருவண்ணாமலை |
C. ஏழுமலை |
| 12 |
ராசிபுரம் (SC) |
Dr. S.D. பிரேம்குமார் |
| 13 |
மொடக்குறிச்சி |
கீர்த்திகா சிவகுமார் |
| 14 |
உதகமண்டலம் |
போஜராஜன் |
| 15 |
திருப்பூர் (தெற்கு) |
S. தங்கராஜ் |
| 16 |
திருவாரூர் |
கோவி சந்துரு |
| 17 |
கந்தர்வகோட்டை (SC) |
C. உதயகுமார் |
| 18 |
புதுக்கோட்டை |
N. ராமச்சந்திரன் |
| 19 |
அறந்தாங்கி |
கவிதா ஸ்ரீகாந்த் |
| 20 |
திருப்பத்தூர் |
K.C. திருமாறன் |
| 21 |
மானாமதுரை (SC) |
பொன். V. பாலகணபதி |
| 22 |
ராமநாதபுரம் |
GBS K. நாகேந்திரன் |
| 23 |
திருச்செந்தூர் |
KRM ராதாகிருஷ்ணன் |
| 24 |
வாசுதேவநல்லூர் (SC) |
அனந்தன் அய்யாசாமி |
| 25 |
ராதாபுரம் |
S.P. பாலகிருஷ்ணன் |
| 26 |
குளச்சல் |
T. சிவகுமார் |
| 27 |
பத்மநாபபுரம் |
P. ரமேஷ் |

மயிலாப்பூரில் தமிழிசை சௌந்தரராஜனும், கோவையில் வானதி சீனிவாசனும் களம் இறங்குவது அந்தத் தொகுதிகளை விஐபி தொகுதிகளாக மாற்றியுள்ளது. மத்திய இணையமைச்சர் எல். முருகன் அவிநாசி (தனி) தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த விஜயதரணிக்கு மீண்டும் விளவங்கோடு தொகுதி வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே திமுக மற்றும் தவெக வேட்பாளர்கள் பிரசாரத்தைத் தொடங்கிவிட்ட நிலையில், தற்போது பாஜகவும் தனது பட்டியலை வெளியிட்டுள்ளதால் தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, சென்னையில் தங்கியுள்ள பிரதமர் மோடி நாளை இந்த வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பாஜக தனது வலுவான வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
