நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக மாநில மையக்குழு கூட்டம் தொடங்கியது - முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு!

 
நயினார் நாகேந்திரன்

சென்னை தி.நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், கட்சியின் மாநில மையக்குழு கூட்டம் இன்று காலை 10 மணியளவில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் துவங்கியது. 

பங்கேற்கும் தலைவர்கள்: இக்கூட்டத்தில் மூத்த தலைவர்களான தமிழிசை சௌந்தரராஜன், பொன். ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் மற்றும் மாநில மையக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளகின்றனர்.

தமிழகத்தில் நிலவிவரும் தற்போதைய அரசியல் சூழல்கள், கட்சி அமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய உட்கட்சி மாற்றங்கள் மற்றும் வரவிருக்கும் அரசியல் நகர்வுகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.