அதிர்ச்சி... பாஜக நிர்வாகி பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை... பதற வைக்கும் வாக்குமூலம்!
பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா. இவர் 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்முறைக்கு ஈடுபடுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டத்தில்அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எம்.எஸ்.ஷாவின் மீது பள்ளி மாணவியின் தந்தை ஒருவர் புகார் மனு அளித்துள்ளார். அதில், தனது மகளின் செல்போனுக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் எம்.எஸ்.ஷா தொடர்ந்து ஆபாசமான உரையாடல்கள் மற்றும் படங்களை அனுப்பியதாக புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது மகளிடம் விசாரித்த போது, தன்னை பள்ளிக்கு செல்ல விடாமல் தனது தாய் தான் பாஜக பிரமுகரிடம் அடிக்கடி அழைத்து சென்றதாகக் கூறியுள்ளார். அத்துடன் தனியார் சொகுசு விடுதிகளிலும் தனியாக இருந்து வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் வாட்ஸ் அப் மூலமாக நான் கூப்பிடும் போதெல்லாம் வந்தால் விரைவில் பைக் வாங்கித் தருகிறேன் எனவும் பாஜக நிர்வாகி கூறியதாக தமது மகள் கூறியதாக புகாரில் தெரிவித்துள்ளார். பள்ளி செல்லும் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி தனியார் சொகுசு விடுதியில் தங்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஆசை காட்டும் வகையில் அவருக்கு புதிய ஆடைகள் மற்றும் பல்வேறு பரிசு பொருட்களையும் பாஜக நிர்வாகி வாங்கி கொடுத்ததாகவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
தனது மனைவியின் கடனை அடைத்து விடுவதாக கூறி அவரையும் விட்டு வைக்கவில்லை. தனது மனைவி மற்றும் மகளுடன் தகாத உறவில் இருந்ததாக பாஜகவின் மாநில பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா மீது புகார் தெரிவித்துள்ளார். தனது மனைவியும் இதில் உடந்தை எனக் கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்து புகார் தெரிவிக்க சென்ற போது போலீசார் தட்டிக்கழிக்க முயற்சித்ததாகவும், நீதிமன்றத்தில் முறையிட்டதை தொடர்ந்து காவல்நிலையத்தில் பாஜக நிர்வாகி எம்..எஸ். ஷா மீதும் மற்றும் பள்ளி மாணவியின் தாய் மீதும் போக்சோ சிறப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்பேரில் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தேர்தல் நேரத்தில் பாஜக நிர்வாகி மற்றும் கல்லூரி நிர்வாகி போக்சோ வழக்கில் சிக்கியது கட்சி வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாகியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!