மாநிலங்களவையில் பாஜக கூட்டணி பலம் 147 ஆக உயர்கிறது... 7 எம்பிக்கள் பாஜகவில் ஐக்கியம்!

 
நாடாளுமன்றம் மக்களவை மாநிலங்களவை பாராளுமன்றம் நாடாளுமன்றம் மக்களவை மாநிலங்களவை பாராளுமன்றம்

தேசிய அரசியலில் பெரும் நிலநடுக்கத்தை ஏற்படுத்தும் வகையில், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய முகமான ராகவ் சத்தா உள்ளிட்ட 7 மாநிலங்களவை உறுப்பினர்கள் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். டெல்லியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ராகவ் சத்தாவுடன் சந்தீப் பதாக், ஹர்பஜன் சிங், ராஜேந்திர குப்தா, விக்ரம் சஹ்னி, அசோக் மிட்டல் மற்றும் சுவாதி மாலிவால் ஆகிய 7 பேரும் பாஜகவில் இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

"தவறான கட்சியில் இருந்த சரியான மனிதன் நான்" என்று குறிப்பிட்ட ராகவ் சத்தா, ஆம் ஆத்மி தனது கொள்கைகளில் இருந்து விலகிவிட்டதாகக் குற்றம் சாட்டினார். இந்த அதிரடித் தாவலால், மாநிலங்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் 147 ஆக உயர உள்ளது.

4 மாநில சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக

மாநிலங்களவையில் மொத்தம் உள்ள 10 ஆம் ஆத்மி எம்பிக்களில், மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களான இந்த 7 பேரும் ஒன்றாகப் பிரிந்து பாஜகவுடன் இணைவதால், இவர்களுக்குக் கட்சித் தாவல் தடைச் சட்டத்திலிருந்து விலக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக மாநிலங்களவைத் தலைவரிடம் முறையான ஆவணங்களை ராகவ் சத்தா சமர்ப்பித்துள்ளார். இந்த அரசியல் மாற்றத்தால், முக்கியமான மசோதாக்களை நிறைவேற்றத் தேவையான பெரும்பான்மையை (123 இடங்கள்) விட பாஜக கூட்டணி தற்போது மிக வலுவான நிலையில் உள்ளது. மறுபுறம், எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' (I.N.D.I.A) கூட்டணியின் பலம் 78 ஆகக் குறைந்துள்ளதால், நாடாளுமன்ற மேல்சபையில் எதிர்க்கட்சிகளின் குரல் மேலும் பலவீனமடைந்துள்ளது.

பாஜக

இந்தச் சம்பவத்தை "ஆபரேஷன் தாமரை" என்று கடுமையாகச் சாடியுள்ள ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங், "பஞ்சாப் மக்கள் இந்தத் துரோகிகளை மன்னிக்க மாட்டார்கள்" என்று கொதித்துள்ளார். பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில காலமே உள்ள நிலையில், ஆம் ஆத்மியின் முக்கியத் தூண்களாகக் கருதப்பட்டவர்கள் பாஜகவிற்குச் சென்றிருப்பது அக்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

அதே சமயம், ராகவ் சத்தா போன்ற செல்வாக்குள்ள இளைஞர்களை ஈர்த்துள்ளதன் மூலம் பஞ்சாபில் தனது கால்தடத்தைப் பலமாகப் பதிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. மாநிலங்களவையில் இனி பாஜக அரசு எந்தவொரு சவாலான சட்டத்தையும் எவ்விதத் தடையுமின்றி நிறைவேற்றும் சூழல் உருவாகியுள்ளதால், தேசிய அரசியலில் இது ஒரு வரலாற்றுத் திருப்பமாகக் கருதப்படுகிறது.