‘கருப்பு ஜூலை’ இனக்கலவரம் குறித்து ஆய்வு செய்ய நாடாளுமன்றத் தேர்வுக்குழு - இலங்கை சபாநாயகர் அறிவிப்பு!

 
கருப்பு ஜூலை’ இனக்கலவரம் இலங்கை

கடந்த 1983-ஆம் ஆண்டு நடைபெற்ற ‘கருப்பு ஜூலை’ இனக்கலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக 11 பேர் கொண்ட நாடாளுமன்றத் தேர்வுக்குழுவை இலங்கை அரசு அமைத்துள்ளது. இந்தக் குழுவில் 2 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளதாக இலங்கை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னா தெரிவித்துள்ளார்.

பெண்கள் விவகாரத்துறை அமைச்சர் சாவித்ரி பால்ராஜ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த 11 பேர் கொண்ட நாடாளுமன்றத் தேர்வுக்குழுவில், 2 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இடம் பெற்றுள்ளனர் என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னா அறிவித்துள்ளார்.

சுமார் 3,000 தமிழர்கள் உயிரிழக்கக் காரணமாக அமைந்த 1983-ஆம் ஆண்டு ‘கருப்பு ஜூலை’ கலவரத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை இக்குழு ஆய்வு செய்ய உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடுகள் மற்றும் தேசிய நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பான பரிந்துரைகளை இக்குழு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளது.