தரமற்ற ரத்தப் பரிசோதனைக்கு இனி கடிவாளம்? நாடு முழுவதும் ரத்த வங்கிகளைக் கண்காணிக்க முடிவு

 
blood bank

 

ரத்தம் செலுத்துவதில் ஏற்படும் தவறுகளைத் தடுக்க, நாடு முழுவதும் செயல்படும் ரத்த வங்கிகளுக்கு புதிய தரக்கட்டுப்பாடுகளை அமல்படுத்த மத்திய அரசுக்கு பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.

India's Digital Blood Bank updates in 2026

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தானமாகப் பெறப்பட்ட ரத்தம் செலுத்தப்பட்டதால், தலசீமியா பாதித்த 5 முதல் 7 வயதுடைய 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, ரத்த வங்கிகளின் தரத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பான சி.டி.எஸ்.சி.ஓ. அமைத்த 5 பேர் கொண்ட துணைக்குழு, நாடு முழுவதும் உள்ள சுமார் 5,000 பதிவு செய்யப்பட்ட ரத்த வங்கிகளுக்கும் தரப்பரிசோதனையை கட்டாயமாக்கப் பரிந்துரைத்துள்ளது.

இதன்படி, ஆண்டுக்கு 3 முறை தரப்பரிசோதனை நடத்தவும், அதற்கான கட்டணமாக ரூ.5,000 நிர்ணயிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தற்போது விருப்பத்தின் அடிப்படையில் நடைபெறும் இந்தச் சோதனை கட்டாயமாக்கப்பட உள்ளது.

IPC Initiative to Boost Quality Standards for Blood and Blood Components

மேலும், தரப்பரிசோதனையில் தோல்வியடையும் ரத்த வங்கிகள் குறைபாடுகளைச் சரிசெய்யும் வரை வழக்கமான பரிசோதனைப் பணிகளை மேற்கொள்ளத் தடை விதிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிந்துரைகள் அமலுக்கு வந்தால், ரத்த வங்கிகளின் தரம் மற்றும் பாதுகாப்பு கண்காணிப்பு மேலும் வலுப்பெறும்