நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து.. பலி எண்ணிக்கை 139 ஆக உயர்வு; 84 பேர் மாயம்.. தேடும் பணிகள் தீவிரம்!

 
படகு கப்பல்

கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபவுதியில் இருந்து ஏமன் நோக்கிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து ஏற்பட்ட கோர விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 139 ஆக உயர்ந்துள்ளது. நீரில் மூழ்கி மாயமான 84 பேரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சைப்ரஸ் படகு கவிழ்ந்து

ஜிபவுதி நாட்டின் கடலோரப் பகுதியிலிருந்து சுமார் 305 புலம்பெயர்ந்த பயணிகளுடன் ஏமன் நாட்டை நோக்கிப் படகு ஒன்று புறப்பட்டுச் சென்றது. ஜிபவுதியில் உள்ள ஓபக் பகுதிக்கு வடக்கே கியூஹியர் அருகே நள்ளிரவில் சென்றுகொண்டிருந்தபோது, அந்தப் படகு எதிர்பாராதவிதமாகத் திடீரெனக் கடலில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் படகில் இருந்தவர்களில் 82 பேர் அதிர்ஷ்டவசமாக நீந்தி கரை சேர்ந்து உயிர் தப்பினர். இருப்பினும், நூற்றுக்கணக்கானோர் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதுவரை நடத்தப்பட்ட மீட்புப் பணிகளில் உடல்கள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வந்த நிலையில், பலியானோர் எண்ணிக்கை 109-ல் இருந்து தற்போது 139 ஆக உயர்ந்துள்ளதாக ஐ.நா. புலம்பெயர்வோர் அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

காங்கோ படகு கவிழ்ந்து

விபத்தில் சிக்கி நீரில் அடித்துச் செல்லப்பட்ட மேலும் 84 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. அவர்களைக் கண்டறியும் பொருட்டு அப்பகுதியில் தீவிரத் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.