நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து... 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு!
நடுக்கடலில் படகு கவிழ்ந்த விபத்திற்குள்ளானதில் 50க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேற்கு ஆப்பிரிக்காவின் அட்லாண்டிக் கடற்கரையில் படகு கவிழ்ந்ததில் 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஐரோப்பாவில் குடியேறும் நோக்கில் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள மோரிடானியா, மேற்கு சஹாரா, மொராக்கோ நாடுகள் வழியாக ஐரோப்பாவின் ஸ்பெயினுக்குள் பலர் சட்டவிரோதமாக நுழைவதாகக் கூறப்படுகிறது. இதற்காக இந்த நாடுகளில் பல்வேறு சட்டவிரோத தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய நிறுவனங்கள் மூலம் பலர் சட்டவிரோதமாக ஐரோப்பாவில் குடியேறி வருகின்றனர்.
இந்நிலையில் ஐரோப்பாவில் குடியேறும் நோக்கில் மோரிடானியாவில் இருந்து படகு மூலம் 65 பாகிஸ்தானியர்கள் உட்பட 80 பேர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் சென்றுக் கொண்டிருந்த படகு மொராக்கோவின் டக்லா அருகே திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 44 பாகிஸ்தானியர்கள் உள்பட 50 பேர் உயிரிழந்து விட்டதாக ஸ்பெயினை தளமாகக் கொண்ட புலம்பெயர்ந்தோர் உரிமைகள் குழுவான ‘வாக்கிங் பார்டர்ஸ்’ தெரிவித்துள்ளது.

படகு கவிழ்ந்து உயிரிழந்த பாகிஸ்தானியர்களுக்கு அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். படகில் இருந்த அனைத்து பாகிஸ்தானியர்களும், கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நகரங்களைச் சேர்ந்தவர்கள் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. 6 பேர் கொண்ட விசாரணைக் குழு மொராக்கோவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொராக்கோ தலைநகர் ரபாத் மற்றும் தக்லாவுக்கு அதிகாரிகள் சென்று, நிலைமையை மதிப்பிட்டு விரிவான அறிக்கையை பிரதமரிடம் வழங்குவார்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
