காங்கோவில் படகுகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; 30 பேர் பலி - 20-க்கும் மேற்பட்டோர் நடுக்கடலில் மாயம்!

 
காங்கோ படகு கவிழ்ந்து

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் இரண்டு இயந்திரப் பொருத்தப்பட்ட மரப்படகுகள் மோதிக் கொண்ட விபத்தில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காங்கோவின் வடமேற்கே உள்ள உபாங்கி நகரிலிருந்து தலைநகர் கின்ஷாசா நோக்கி ஒரு படகும், கின்ஷாசாவிலிருந்து லுகோலெலா நோக்கி மற்றொரு படகும் புறப்பட்டுச் சென்றன.

சைப்ரஸ் படகு கவிழ்ந்து

ஈகுவேடீர் மாகாணத்தின் காம்பே-லுகோலெலா பகுதி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக இந்த இரண்டு இயந்திரப் பொருத்தப்பட்ட மரப்படகுகளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் தண்ணீரில் மூழ்கி 30 பேர் பலியாகினர்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு முறைப்படி அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாகாண உள்துறை அமைச்சர் கிரிஸ்பின் புடு தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் சிக்கி 20-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்பதால், அவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.