தோண்ட தோண்ட சடலங்கள்... நேபாளத்தில் பலி எண்ணிக்கை 1,003 ஆக உயர்வு!

 
நேபாள்

நேபாளத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.

நேபாளப் பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 1,003 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சித்வான் மாவட்டத்தில் 321 உடல்களும், நவல் பராசி மாவட்டத்தில் 216 உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கித் தவித்த 11,884 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

நேபாள்

பேரிடரில் சிக்கி 25 காவல்துறையினர், 45 ராணுவ வீரர்கள் மற்றும் 583 வெளிநாட்டினர் எனப் பலரைக் காணவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.