திருப்பத்தூர் அருகே 2 சிறுவர்கள் சடலமாக மீட்பு - போலீசார் தீவிர விசாரணை!

 
சடலமாக கொலை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே விவசாயக் கிணறு ஒன்றிலிருந்து அழுகிய நிலையில் மீட்கப்பட்ட இரண்டு சிறுவர்களின் உடல்கள் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடிக்கு அருகில் உள்ள விவசாயக் கிணற்றில் 15 மற்றும் 9 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுவர்களின் உடல்கள் அழுகிய நிலையில் கிடப்பதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

மூழ்கி பலி

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், தீயணைப்புத் துறையின் உதவியுடன் சடலங்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த சிறுவர்கள் யார், அவர்கள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து அருகிலுள்ள காவல் நிலையங்களின் ஆள் காணாமல் போன புகார்களை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், அவர்கள் கிணற்றில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகினரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.