பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மிக்கு பன்றிக்காய்ச்சல் தொற்று உறுதி!
பிரபல பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மிக்கு H1N1 எனப்படும் பன்றிக்காய்ச்சல் தொற்று இருப்பது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய படப்பிடிப்பு மற்றும் பணிக்காக ராஞ்சி உள்ளிட்ட இடங்களுக்குப் பயணம் செய்து திரும்பிய இம்ரான் ஹாஷ்மிக்கு, கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மும்பையில் மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்துகொண்ட அவருக்குப் பன்றிக்காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது மருத்துவர்களின் அறிவுரையின்படி அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு ஓய்வெடுத்து வருகிறார்.

இந்த உடல்நலப் பாதிப்பு காரணமாக, பெங்களூரில் அவர் கலந்து கொள்ளவிருந்த இசை மற்றும் ரசிகர்களைச் சந்திக்கும் நிகழ்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 12-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
