பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு.. மசூதி, காவல் நிலையம் அருகே தற்கொலைப்படை தாக்குதல் - 5 காவலர்கள் உட்பட 16 பேர் பலி!
பாகிஸ்தானின் கோஹாட் நகரில் மசூதியில் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது காவல் நிலையம் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 16 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் கோஹாட் நகரில் உள்ள மசூதியில் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், அதற்கு அருகில் இருந்த காவல் நிலையம் மீது தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வெடிபொருட்கள் முழுமையாக நிரப்பப்பட்ட வாகனத்தை ஓட்டிச் சென்ற தற்கொலை குண்டுதாரி, காவலர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த வளாகத்தின் வெளிச்சுவர் மீது மோதி இந்த நாசவேலையில் ஈடுபட்டுள்ளார்.

இக்கொடூரத் தாக்குதலில் 5 காவலர்கள் உட்பட மொத்தம் 16 பேர் பரிதாபமாகத் கொல்லப்பட்டனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு அமைப்பும் தங்களின் பொறுப்பை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
