தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்... தலைநகரில் பரபரப்பு!

 
வெடிகுண்டு மிரட்டல்

 சென்னை மேற்கு மாம்பலம் அசோக் நகரில் செயல்பட்டு வரும்  தனியார் பள்ளிக்கு   வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டல்  காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தனியார் பள்ளிக்கு விடுக்கப்பட்டு இருந்தது. இதன் பேரில் உடனடியாக   மோப்ப நாய் உதவியுடன் பள்ளி வளாகம் முழுவதும்  சோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு மர்ம அழைப்பு வெறும் வதந்தி என உறுதி செய்யப்பட்டது. ஆனால் பள்ளிக்கு பிள்ளைகளை விட வந்த பெற்றோர்கள் இத்தகவலை கேள்விப்பட்டதும் உடனடியாக கையோடு பிள்ளைகளை மறுபடியும் வீட்டிற்கு அழைத்து சென்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் இதே போல் சென்னையில் உள்ள பல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு குறிப்பிடத்தக்கது.  

வெடிகுண்டு மிரட்டல்

சென்னை பாரிஸ், பெரம்பூர், எழும்பூர், சாந்தோம்  பூந்தமல்லி , கோபாலபுரம் பகுதிகளில் செயல்பட்டு வரும்  தனியார் மேல்நிலைப்பள்ளுக்கு  ஒரே நேரத்தில் மின்னஞ்சல் மூலம்  வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.   அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  மர்ம நபர் ஒருவர் ஒரே நேரத்தில் அனைத்து  பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்திருந்தது, ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவியர் இடையே பெரும்  அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி உடனடியாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அத்துடன்  மாணவர்களை பள்ளி நிர்வாகம் பத்திரமாக பெற்றோருடன் அனுப்பி வைக்கத் தொடங்கியது. 

வெடிகுண்டு

இதுகுறித்து  தகவல் தெரிந்ததும்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  காவல்துறையினர்  மோப்பநாய்களின் உதவியுடன் அண்ணா நகர், ஜே.ஜே நகர் என வெடிகுண்டு மிரட்டல் வந்த பகுதிகளில் செயல்படும் பள்ளிகளில் சோதனை நடத்தப்பட்டது.  சோதனையின் முடிவில் இது வெறும் புரளி என தெரியவந்ததை அடுத்து, மக்கள் பீதியடைய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டது 

From around the web