பரபரப்பு... திருநெல்வேலி ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

நாளை ஜனவரி 26ம் தேதி இந்தியா முழுவதும் 76வது குடியரசு தினம் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து இந்தியாவில் அனைத்து முக்கிய இடங்கள், ரயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நெல்லை ரயில் நிலையத்துக்கு மர்ம நபர்கள் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து நெல்லை ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து விடுக்கப்பட்ட அழைப்பு நெல்லை கோபாலசமுத்திரம் பகுதியில் இருந்து சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்தது.
சென்னையை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், நெல்லை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து திருநெல்வேலி ரயில் நிலையத்தில் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மிரட்டல் விடுத்தவர் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!