பத்திரம் மக்களே... வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி - வானிலை மையம் எச்சரிக்கை!

 
புயல் காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலம்

தென்மேற்கு பருவமழை விலகி வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய கிழக்கு வங்கக்கடலில் வரும் அக்டோபர் 23-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி! மேலும் 2 தினங்களுக்கு தொடரும் மழை!

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அக்டோபர் 23-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இந்த தாழ்வுப் பகுதியானது வடக்கு-மேற்கு திசையை நோக்கி நகர்ந்து, படிப்படியாக மேலும் வலுவடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

நாளை அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் கேரளா, கர்நாடகக் கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவுப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.

வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வுப் பகுதி  கனமழை மழை

எனவே, கடல் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளதால், குறிப்பிட்ட தேதிகளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.