பத்திரம் மக்களே... இன்றிரவு 17 மாவட்டங்களில் வெளுக்கப் போகுது வானம்.. கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று இரவு நேரத்தில் மாநிலத்தின் 17 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பின்படி, இன்று இரவு கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம் மற்றும் ஈரோடு. ஆகிய 17 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்

கடந்த சில தினங்களாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து பரவலான மழைப்பொழிவு பதிவாகி வருகிறது. இந்நிலையில் இன்று இரவு திடீரென 17 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இரவு நேரப் பயணங்களின் போது தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
