பத்திரம் மக்களே.. தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

 
மழை மாணவி

வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மழை பெய்யும் போது மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

மழை கல்லூரி விடுமுறை மாணவிகள் குடை

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் மாலையிலோ அல்லது இரவு வேளையிலோ ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.