பத்திரம் மக்களே... இன்று தமிழகத்தில் 10 இடங்களில் சதமடித்த வெயில் - அதிகபட்சமாக வேலூரில் 104.9°F வெப்பம் பதிவு!

 
வெயில் வெப்பம் அக்னி வெயில் வெப்பம் அக்னி

தமிழகத்தின் சில பகுதிகளில் கோடை வெயில் தொடர்ந்து வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் அனல் காற்று வீசி வருவதால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் இன்று தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் 100° பாரன்ஹீட்டைத் தாண்டிப் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக வேலூரில் 104.9° பாரன்ஹீட் (40.5°C) வெப்பம் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 104.18° பாரன்ஹீட் (40.1°C) வெப்பம் பதிவாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தின் திருத்தணியில் 103.1° பாரன்ஹீட் (39.5°C) வெயில் பதிவாகியுள்ளது. சென்னையின் மத்தியப் பகுதியான நுங்கம்பாக்கத்தில் 102.2° பாரன்ஹீட் (39.0°C) வெப்பம் பதிவாகியுள்ளது.

வெயில்

நெல்லைப் பகுதியான பாளையங்கோட்டையில் 102.2° பாரன்ஹீட் (39.0°C) வெயில் பதிவாகியுள்ளது. டெல்டா மாவட்டமான தஞ்சாவூரில் 102.2° பாரன்ஹீட் (39.0°C) வெப்பம் பதிவாகியுள்ளது. தென் தமிழகத்தின் முக்கிய நகரான மதுரையில் 101.84° பாரன்ஹீட் (38.8°C) வெயில் பதிவாகியுள்ளது. கொங்கு மண்டலப் பகுதியான நாமக்கல்லில் 101.48° பாரன்ஹீட் (38.6°C) வெப்பம் பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தி பகுதியில் 101.3° பாரன்ஹீட் (38.5°C) வெயில் பதிவாகியுள்ளது. மதுரை விமான நிலையப் பகுதியில் 101.3° பாரன்ஹீட் (38.5°C) வெப்பம் பதிவாகியுள்ளது.

உஷார்! அக்னி நட்சத்திரம் முடிந்தாலும் இந்த 13 மாவட்டங்களில் வெயில் கொளுத்துமாம்!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வந்தாலும், வட தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் உள்ள இந்த 10 முக்கிய இடங்களில் வெயில் சதம் அடித்து மக்களை அசுவாசப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.