பத்திரம் மக்களே.. தமிழகத்தில் அடுத்த 3 வாரங்களுக்கு வெயில் தீவிரம் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

 
வெயில் வெப்பம் கோடை பெண்கள்

எல் நினோ பாதிப்பின் காரணமாகத் தமிழகத்தில் அடுத்த மூன்று வாரங்களுக்கு இயல்பை விட வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைக்கும் என்பதால் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வெப்பம்  வெயில் வறட்சி

சூப்பர் எல் நினோவின் தாக்கத்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று வாரங்களுக்கு வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். பகல் நேரங்களில் இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இடையிடையே இரவுக் காலங்களில் வெப்பச்சலனம் காரணமாக லேசான மழை பெய்ய வாய்ப்பிருந்தாலும், பகல் நேரங்களில் வெயிலின் தீவிரம் அதிகமாகவே நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெயில் வெப்பம் மாணவிகள் கல்லூரி

உடல் நலனைக் காக்கும் பொருட்டு பொதுமக்கள் அதிக நீர்ச்சத்து கொண்ட உணவுகளையும் பழச்சாறுகளையும் அதிகளவில் உட்கொள்ள வேண்டும். குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள் மற்றும் உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் நண்பகல் நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது.

விவசாயிகள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நேரடியாக வெயிலில் வேலை செய்வதைத் தவிர்த்துத் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.