பத்திரம் மக்களே.. 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்!
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வானிலை மாற்றங்கள் காரணமாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை தொடர வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையின்படி, திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், நாமக்கல் மற்றும் தேனி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட இந்தப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
