முன்பதிவு தொடங்கியது... சம்மர் விடுமுறை ஸ்பெஷல் ரயில் அறிவிப்பு!

 
ரயில் டிக்கெட் ரயில் டிக்கெட்

தமிழகத்தில் ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை தொடங்கவுள்ளதை முன்னிட்டு, பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ள திருச்சி - பெங்களூரு சிறப்பு ரயிலுக்கான (06007/06008) முன்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியுள்ளது. இந்தச் சிறப்பு ரயில் ஏப்ரல் மாதத்தில் நான்கு செவ்வாய்க்கிழமைகளில் (ஏப்ரல் 7, 14, 21, 28) இயக்கப்பட உள்ளது.

எக்ஸ்பிரஸ் ரயில்

திருச்சி – எஸ்.எம்.வி.டி பெங்களூரு (06007): திருச்சியில் இருந்து அதிகாலை 5:30 மணிக்குப் புறப்பட்டு, மதியம் 1:30 மணிக்குச் சென்ட்ரல் சில்க் போர்டு அருகே உள்ள எஸ்.எம்.வி.டி பெங்களூரு நிலையத்தைச் சென்றடையும். எஸ்.எம்.வி.டி பெங்களூரு – திருச்சி (06008): பெங்களூருவில் இருந்து மதியம் 3:00 மணிக்குப் புறப்பட்டு, இரவு 10:30 மணிக்குத் திருச்சியை வந்தடையும்.

கரூர், நாமக்கல், சேலம், பங்காருபேட்டை மற்றும் கிருஷ்ணராஜபுரம் ஆகிய முக்கிய நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும். இந்த ரயிலில் மொத்தம் 18 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. 2 ஏசி சேர் கார் பெட்டிகள். 8 அமரும் வசதி கொண்ட சேர் கார்  பெட்டிகள். 6 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள். 2 சரக்கு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள்.

 சிறப்பு ரயில்

இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் ரயில் நிலைய கவுண்டர்களில் தொடங்கியுள்ளது. வார இறுதி நாட்களைத் தவிர்த்து வார நாட்களில் இயக்கப்படுவதால், அவசரப் பணிகளுக்காகப் பெங்களூரு செல்பவர்களுக்கு இது மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.