முன்பதிவு துவங்கியது... இன்று முதல் காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்- முழு விவரங்கள்!

 
எக்ஸ்பிரஸ் ரயில்

காந்தி ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தொடர் விடுமுறை வந்துள்ளதால், பயணிகளின் கூட்ட நெரிசலைக் தவிர்க்கும் வகையில் தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களுக்குச் சிறப்பு ரயில்களை இயக்கியுள்ளது தெற்கு ரயில்வே.

இன்று இரவு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06123) தென்காசி சென்று சேரும். மறுமார்க்கமாக அக்டோபர் 4 அன்று மாலை செங்கோட்டையில் இருந்து புறப்படும் ரயில் (06124) தாம்பரம் வந்தடையும். இத்துருவத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, மதுரை, சிவகாசி, ராஜபாளையம் உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் ரயில்கள் நின்று செல்லும்.

புறநகர் மின்சார ரயில்

சென்னை சென்ட்ரல் - போத்தனூர் - சென்னை கடற்கரை: அக்டோபர் 1 இரவு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06023) போத்தனூர் செல்லும். மறுமார்க்கமாக அக்டோபர் 4 மாலை போத்தனூரில் இருந்து புறப்படும் ரயில் (06024) சென்னை கடற்கரைக்கு இயக்கப்படுகிறது.

எர்ணாகுளம் - சென்னை எழும்பூர்: அக்டோபர் 4 இரவு எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06056) மறுநாள் பகலில் சென்னை எழும்பூர் வந்தடையும். மறுமார்க்கமாக அக்டோபர் 5 மதியம் எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில் (06055) எர்ணாகுளம் செல்லும்.

ரயில் தண்டவாளம்

தாம்பரம் - மானாமதுரை: அக்டோபர் 1 மாலை தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06159) மானாமதுரை சென்றது. மறுமார்க்கமாக அக்டோபர் 4 மதியம் மானாமதுரையில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் (06160) இயக்கப்படுகிறது.

திருநெல்வேலி - தாம்பரம்: அக்டோபர் 4 அன்று திருநெல்வேலியில் இருந்தும், அக்டோபர் 5 அன்று தாம்பரத்தில் இருந்தும் சிறப்பு ரயில்கள் (06166/06165) இயக்கப்படுகின்றன. இந்தச் சிறப்பு ரயில்களுக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8  மணிக்குத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.