இன்று முன்பதிவு ஆரம்பம்... தீபாவளிக்கு நெல்லை, குமரி வரையில் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு... உடனே முந்துங்க!
வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு எளிதாகப் சென்று வரச் சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் சிறப்பு ரயில்களைத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
1. சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி - எழும்பூர் சிறப்பு ரயில்கள்: எழும்பூர் ➔ கன்னியாகுமரி (ரயில் எண்: 06151). நவம்பர் 5-ம் தேதி இரவு 11:50 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டு, மறுநாள் (நவ. 6) மதியம் 3:15 மணிக்குக் கன்னியாகுமரி சென்றடையும். விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி.

கன்னியாகுமரி ➔ எழும்பூர் (ரயில் எண்: 06152). புறப்படும் நேரம்: நவம்பர் 9-ஆம் தேதி இரவு 11:20 மணிக்குக் கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு, மறுநாள் (நவ. 10) மதியம் 12:00 மணிக்குச் சென்னை எழும்பூர் வந்தடையும். திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம் மற்றும் விழுப்புரம் வழியாக செல்லும்.
2. தாம்பரம் - தென்காசி / செங்கோட்டை - தாம்பரம் சிறப்பு ரயில்கள்: தாம்பரம் ➔ தென்காசி (ரயில் எண்: 06049). நவம்பர் 7-ஆம் தேதி அதிகாலை 5:00 மணிக்குத் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, அன்றைய தினம் மாலை 4:45 மணிக்குத் தென்காசி சென்றடையும். செங்கோட்டை ➔ தாம்பரம் (ரயில் எண்: 06050): நவம்பர் 9-ஆம் தேதி மதியம் 3:00 மணிக்குச் செங்கோட்டையிலிருந்து புறப்பட்டு, மறுநாள் (நவ. 10) அதிகாலை 3:20 மணிக்குத் தாம்பரம் வந்தடையும்.

செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், கொடை ரோடு, மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில் சந்தை, கடையநல்லூர் மற்றும் தென்காசி.
இச்சிறப்பு ரயில்களுக்கான பயணச் சீட்டு முன்பதிவு இன்று தொடங்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பயணிகள் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் மற்றும் ரயில்வே பயணச்சீட்டு மையங்கள் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
