பொம்மன் பெள்ளி தம்பதி ரூ2 கோடி கேட்டு நோட்டீஸ்!! அதிர வைக்கும் தகவல்கள்!!

 
பொம்மன் பெள்ளி

ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப் படமான “தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்”  இயக்குநர் கார்த்திகி. இந்த திரைப்படம் நீலகிரி மாவட்டம், முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில், தாயை பிரிந்த யானை குட்டிகளையும், அவற்றை பராமரித்து வந்த பாகன் தம்பதியர் இடையேயான பாச உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது.   இந்த திரைப்படத்தின் மூலம் யானை பராமரிப்பாளர்களான பொம்மன் - பெள்ளி சர்வதேச அளவில் புகழ் பெற்றனர். இந்த படத்தின் இறுதி கட்டப்படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது  இயக்குநர் பணமின்றி  தவித்து வந்தார்.

பொம்மன் பெள்ளி

அவருக்கு  தங்களது சேமிப்பில் இருந்த 1 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து உதவியதாக கூறினர்.  திரைப்படத்தில் நடிக்க வைத்ததற்கோ, அவர்களின் சேமிப்பு பணமான ஒரு லட்சத்தையோ  கூட இயக்குநர் கார்த்திகி இது வரையில் திரும்ப தரவில்லை எனவும்  தெரிவித்துள்ளனர். மேலும், ஆவணப்படம் வெளியான பிறகு வீடு கட்டித் தருவதாகவும், படத்தில் நடித்ததிற்காக பணம் வழங்கப்படும் எனவும்  இயக்குநர் கூறியிருந்தாராம்.   அவர்கள் கூறியது போல் எந்த உதவியும் செய்யவில்லையாம். தங்களுக்கு ரூ2 கோடி  கேட்டு படத்தின் இயக்குநருக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் பொம்மன் - பெள்ளி தம்பதியர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். தங்களைப் பயன்படுத்தி பல நட்சத்திரங்களை படக்குழுவினர்  சந்தித்துள்ளனர். ஆனால் அதன் மூலம் கிடைத்த வருவாயையும் தர மறுத்து வருவதாக  அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோனி பொம்மன், பெள்ளி


 பட தயாரிப்பு நிறுவனமான சிக்யா என்டர்டெயின்மென்ட், இது குறித்த விளக்க குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பொம்மன் - பெள்ளி தம்பதிக்கு ஏற்கனவே கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்துவிட்டதாகவும், இனி அவர்களுக்கு எந்தப் பணமும் தரவேண்டிய தேவை இல்லை எனவும் தெரிவித்துள்ளது. இந்த படத்தின் இயக்குநர் கார்த்திகி தற்போது வெளிநாட்டில் உள்ளார்.  அவர் இந்தியா வந்த பிறகு அவரும் தனது தரப்பு விளக்கத்தை அளிப்பார் என  கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web