சென்னை விடுதியில் பயங்கரம் - காதலியைக் கொன்றுவிட்டு காதலன் தற்கொலை!

 
காதல் ஜோடி தற்கொலை கார் காதல் ஜோடி தற்கொலை கார்

சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில், காதலியைத் திட்டமிட்டுப் படுகொலை செய்துவிட்டு இளைஞர் ஒருவரும் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரியமேடு குமாரப்பா தெருவில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு நேற்று காலை இளம் ஜோடி ஒன்று அறை எடுப்பதற்காக வந்துள்ளது.

அறை எடுத்த சிறிது நேரத்தில், டிபன் வாங்கி வருவதாகக் கூறிவிட்டு அந்த இளைஞர் மட்டும் வெளியே சென்றுள்ளார். ஆனால், அவர் உணவு எதுவும் வாங்காமல் மீண்டும் அறைக்குத் திரும்பியுள்ளார்.

கொலை

இன்று காலை 10 மணி வரை நீண்ட நேரமாகியும் அறை கதவு திறக்கப்படாததால், விடுதி மேலாளர் ராஜேஷ் சந்தேகமடைந்து கதவைத் தட்டியுள்ளார். எவ்வித பதிலும் வராததால், கதவில் உள்ள சிறிய கண்ணாடி வழியாகப் பார்த்தபோது உள்ளே இருவரும் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து வந்த பெரியமேடு போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கு பவ்யா என்ற இளம்பெண் கழுத்து மற்றும் மணிக்கட்டு அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். தற்கொலை: அவரைப் படுகொலை செய்த பிறகு, காதலன் பாரதி பெருமாள் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பள்ளி மானவி தற்கொலை

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அறையில் இருந்த அடையாள அட்டைகள் மூலம் உயிரிழந்தவர்களின் விபரங்கள் தெரிய வந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்தவர் பவ்யா (21). சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்தவர் பாரதி பெருமாள் (21).

ஏதேனும் வேலை பார்க்கும் இடத்தில் பழக்கம் ஏற்பட்டதா? அல்லது சமூக வலைதளம் மூலம் பழகினார்களா? என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.