மாணவருடன் ஆசிரியை பாலியல் உறவு - பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை ஆசிரியைக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாக்குமூலம்!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பள்ளி மாணவர்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்ட வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை நீதிமன்றத்தில் அளித்த ஆதரவான வாக்குமூலத்தைத் தொடர்ந்து ஆசிரியைக்குக் குறைவான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ஷெல்பி டான் லாஷோம்ப் (25) என்பவர் மீது இரண்டு சிறுவர்களுடன் பாலியல் உறவு கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
பாதிக்கப்பட்ட சிறுவர்களில் ஒருவரின் தந்தை நீதிமன்றத்தில் ஆஜராகி, இந்தச் சம்பவத்தால் தனது மகனுக்கு எந்தவிதமான உளவியல் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், ஆசிரியருக்குத் தான் ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட தரப்பின் ஆதரவு மற்றும் அரசுத் தரப்புடனான உடன்படிக்கை ஆகியவற்றின் அடிப்படையில், நீதிபதி அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 1,000 டாலர் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
