#BREAKING: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 14 மாத குழந்தை பத்திரமாக மீட்பு!

 
சாத்விக்

 கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில், 14 மாத குழந்தை ஒன்று ஆழ்துளை கிணற்றுக்குள்  தவறி விழுந்த நிலையில், நேற்று மாலை முதல் விடிய விடிய மீட்பு பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வந்த நிலையில் உயிருடன் குழந்தை மீட்கப்பட்டது. கர்நாடகா மாநிலம், லச்சயான் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது 14 மாத ஆண் குழந்தை சாத்விக், தங்களது வீட்டின் அருகே இருந்த நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, அந்த பகுதியில் இருந்த ஆழ்துளைக் கிணற்றினுள் நேற்று மாலை தவறி விழுந்து விட்டது. 

ஆழ்துளை

இது குறித்து உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்த நிலையில், நேற்று மாலை முதல் மீட்பு பணிகள் நடைப்பெற்றது. ஆழ்துளை கிணற்றின் அருகிலேயே பொக்லைன் இயந்திரம் மூலமாக குழி தோண்டும் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வந்தது  குழந்தையிடம் பெற்றோர்கள் பேச்சுக் கொடுத்தும், ட்யூப் வழியாக ஆழ்துளை கிணற்றினுள் ஆக்சிஜன் செலுத்தப்பட்டும் வந்தது.

சாத்விக்

 சுமார் 20 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியிருந்தது. குழந்தையின் உடலில் அசைவு இருந்ததைக் கண்ட மீட்பு குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் 20 மணி நேர தீவிர போராட்டத்திற்கு ஆழ்துளையில் இருந்து குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட குழந்தை உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குழந்தையை போராடி மீட்ட மீட்பு குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள் 

From around the web