#BREAKING: "சென்னை சூப்பர் 6" - 20,000 பேருக்கு உயர் ஊதிய வேலை... 1000 மினி பஸ்கள்: சிங்காரச் சென்னைக்கு திமுக ஸ்கெட்ச்!

 
ஸ்டாலின் திமுக ஸ்டாலின் திமுக

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், சென்னை மாநகருக்கான 6 முக்கிய வாக்குறுதிகள் அடங்கிய பிரத்யேகத் தேர்தல் அறிக்கையை திமுக இன்று வெளியிட்டுள்ளது. "சிங்காரச் சென்னை 2.0" திட்டத்தின் அடுத்தகட்டமாக இந்தப் புதிய வாக்குறுதிகள் பார்க்கப்படுகின்றன.

1. தாகம் தீர்க்கும் RO குடிநீர்:

சென்னையில் இன்னும் மெட்ரோ குடிநீர் இணைப்பு வழங்கப்படாத பகுதிகளுக்கு, குழாய் இணைப்பு வரும் வரை தங்குதடையின்றி RO சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் காலமுறைப்படி விநியோகம் செய்யப்படும்.

2. போக்குவரத்துப் புரட்சி - 1000 மினி பஸ்கள்:

சென்னையின் மூலை முடுக்குகளையும் இணைக்கும் வகையில் 1,000 புதிய மினி பேருந்துகள் இயக்கப்படும். இவை பேருந்து நிறுத்தங்கள், மெட்ரோ நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களை இணைக்கும் 'ஃபீடர்' (Feeder) சேவையாகச் செயல்படும்.

இன்று முதல்  சுங்கக்கட்டணம் கிடையாது!! சென்னை மக்கள் மகிழ்ச்சி!

3. 2028-க்குள் மெகா புராஜெக்ட்ஸ்:

சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் 2028-ஆம் ஆண்டிற்குள் முழுமையாக முடிக்கப்படும். நகரின் பாதாளச் சாக்கடைத் திட்டம் 2027-க்குள் போர்க்கால அடிப்படையில் நிறைவு செய்யப்படும்.

4. டெக்னாலஜி ஹப் & வேலைவாய்ப்பு:

சென்னையில் AI (செயற்கை நுண்ணறிவு), அனிமேஷன், கேமிங் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் ஆகியவற்றுக்கான சிறப்பு மையம் அமைக்கப்படும். இதன் மூலம் ரூ.10,000 கோடி முதலீட்டில் சுமார் 20,000 பேருக்கு அதிக சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். உலகளாவிய திறமைத் தளம் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் மூலம் இளைஞர்களின் வருமானம் உயர்த்தப்படும்.

சென்னை சங்கமம் பொங்கல்

5. பாதுகாப்பான சென்னை:

நகரம் முழுவதும் அதி ஒளி தெருவிளக்குகள் அமைக்கப்பட்டு, இரவு நேரங்களில் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

6. விலங்குகள் பிறப்புக் கட்டுப்பாடு:

தெருநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த, கால்நடை மருத்துவர்கள் மற்றும் நாய் பிடிப்பவர்களின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரிக்கப்படும். விரிவுபடுத்தப்பட்ட காப்பகங்கள் மூலம் முறையான பராமரிப்பு உறுதி செய்யப்படும்.