#BREAKING: மேலூர் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் எம்.பி. விஸ்வநாதன் அறிவிப்பு!

 
மேலூர் மேலூர்

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தனது 28-வது தொகுதியான மேலூருக்கான வேட்பாளரை அறிவித்துள்ளது. காஞ்சிபுரம் தொகுதியின் முன்னாள் எம்.பி. பெ. விஸ்வநாதன் மேலூர் தொகுதி வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் நீண்ட கால அனுபவம் கொண்ட மூத்த தலைவர்களில் ஒருவரான பெ. விஸ்வநாதன் 2009 முதல் 2014 வரை காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியின் உறுப்பினராகப் பணியாற்றியவர். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேசியச் செயலாளராகவும், தெலங்கானா மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராகவும் மிக முக்கியமான பொறுப்புகளை வகித்துள்ளார்.

மாணிக்கம் தாகூர் மேலூர்

கேரளா மற்றும் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பார்வையாளராகவும் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. மேலூர் தொகுதியைப் பெறுவதில் விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் மற்றும் சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

மாணிக்கம் தாகூர் தனது உறவினருக்குச் சீட் கேட்டதாகவும், உள்ளூர் நிர்வாகிகள் கார்த்தி சிதம்பரம் ஆதரவுடன் களம் கண்டதாகவும் கூறப்பட்டது. இரு தரப்பு மோதலால் தொகுதி கை நழுவிவிடக் கூடாது என்பதற்காக, அனுபவம் வாய்ந்த மற்றும் தேசிய அளவில் செல்வாக்குள்ள விஸ்வநாதனைத் தலைமைத் தேர்வு செய்துள்ளது.

வ்ச்ட்க்

வேட்புமனுத் தாக்கல் செய்ய நாளை (ஏப்ரல் 6) கடைசி நாள் என்பதால், அறிவிப்பு வெளியான கையோடு விஸ்வநாதன் மேலூர் விரைந்துள்ளார். நாளை காலை அவர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.