#BREAKING: திடீரென ரத்தான உள்துறை அமைச்சரின் தமிழக பயணம்.. பாஜக தலைமை அறிவிப்பு!

 
அமித் ஷா

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தமிழகத்தில் 19 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 20 தொகுதிகள் பாஜக கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்தான், பா.ஜ., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி, தமிழகத்தில் பிரசாரம் செய்தார். இதையடுத்து பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

பிரதமர் மோடி

அதன்படி, ஏப்ரல் 4, 5 ஆகிய தேதிகளில் அமித்ஷா தமிழகத்தில் பிரசாரம் செய்வார் என்று கூறப்பட்டது.நாளை டெல்லியில் இருந்து தமிழகம் வந்து மதுரையில் அமித்ஷா இறங்குவார். அதன்பின், பா.ஜ., வேட்பாளரான, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து, மதுரை, தேனி, சிவகங்கை மற்றும் நாளை மறுநாள் (ஏப்., 5) கன்னியாகுமரியில் பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அமித்ஷாவின் 2 நாள் தமிழக சுற்றுப்பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் அவரது பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாறாக அமித் ஷா வேறொரு நாளில் பிரசாரம் செய்வார் என்றும் அதன் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்றும் தமிழக பாஜக தலைமை அறிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள் 

From around the web