#BREAKING: உலகையே உலுக்கும் ‘அனைத்து குண்டுகளின் தந்தை’ தயார் - அமெரிக்காவிற்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!

 
ஈரான் குண்டுகளின் தந்தை  குண்டு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் என மறைமுகமாக எச்சரித்திருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் 10 டன் எடையுள்ள ‘அனைத்து குண்டுகளின் தந்தை’ என்ற பேரழிவு ஆயுதத்தைத் தயார் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

ஈரானின் நிலத்தடி அணுசக்தி மையங்களைக் குறிவைத்து, அணு ஆயுதத்திற்கு இணையான அழிவுத்திறன் கொண்ட 'ஜிபியு-43/பி' (MOAB - Mother of All Bombs - ‘அனைத்து வெடிகுண்டுகளின் தாய்’) என்ற மிகப்பெரிய சாதாரண வெடிகுண்டைப் பயன்படுத்தப்போவதாக டிரம்ப் அண்மையில் தெரிவித்திருந்தார்.

அமெரிக்கா ஈரான்

ஈரானின் பதிலடி ஆயுதம்: டிரம்பின் இந்த மிரட்டலுக்குச் சவால் விடும் வகையில், அமெரிக்காவின் 9.8 டன் எடையுள்ள குண்டை விட அதிக எடைகொண்ட, 10 டன் எடை கொண்ட 'சூப்பர் வெடிகுண்டை' ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. இது ரஷ்யாவின் 'இலூயுஷின்' (IL-76) கனரகப் போர் விமானங்கள் மூலம் வீசப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஈரானின் தேசிய பாதுகாப்பு குழுவின் துணைத் தலைவர் அப்பாஸ் மொக்தடேய் அமெரிக்காவிற்கு விடுத்துள்ள எச்சரிக்கையில், "அமெரிக்கா இத்தகைய ஆயுதங்களைப் பயன்படுத்தத் துணிந்தால், அவர்களின் வெள்ளை மாளிகை கருப்பு மாளிகையாக மாறும்" என்று கடுமையாகத் தெரிவித்துள்ளார்.

ஈரான் அமெரிக்கா போர்

மேலும், போர் மீண்டும் தொடங்கும் பட்சத்தில் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள், ரகசிய முகாம்கள் மற்றும் அமெரிக்க நட்பு நாடுகளின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் அனைத்தும் ஈரானின் இலக்காகி தகர்க்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.