BREAKING: இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் கடற்படை தாக்குதல்! 'சன்மார் ஹெரால்டு' உள்ளிட்ட 2 கப்பல்கள் பின்வாங்கின!

 
ஹார்முஸ் ஹார்முஸ்

சர்வதேச வான்வழி மற்றும் கடல்வழிப் பாதைகளில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இந்தியாவிற்குச் சொந்தமான வணிகக் கப்பல்கள் குறிவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாரசீக வளைகுடாவையும் ஓமன் வளைகுடாவையும் இணைக்கும் முக்கிய நீர்வழிப் பாதையான ஹார்முஸ் நீரிணை வழியாக இன்று மாலை இந்தியக் கப்பல்கள் கடக்க முயன்றன. அப்போது அங்கிருந்த ஈரான் கடற்படையினர் இக்கப்பல்களை நோக்கித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஹார்முஸ்

சன்மார் ஹெரால்டு கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் பிரம்மாண்டமான கப்பலாகும். ஜக் அர்னவ் பல்வேறு சரக்குகளை ஏற்றிச் செல்லும் வணிகக் கப்பலாகும். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, இரு கப்பல்களும் ஹார்முஸ் நீரிணையைக் கடக்கும் முயற்சியைக் கைவிட்டு, பாதுகாப்பான இடங்களை நோக்கிப் பின்வாங்கின.

இந்த இக்கட்டான சூழல் குறித்துப் பிரிட்டனின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் UKMTO அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "இந்தியக் கப்பல்கள் மற்றும் அதில் உள்ள மாலுமிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். கப்பல்களுக்குப் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை" என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி பாரசீக வளைகுடா இந்தியக் கப்பல்

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நிலவும் முரண்பாடுகளால் இந்தியக் கப்பல்கள் பாதிக்கப்படுவது மத்திய வெளியுறவுத் துறையினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான ராஜதந்திர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.