#BREAKING: தமிழகம் முழுவதும் மாதிரி வாக்குப்பதிவு நிறைவு - 7 மணிக்கு சீறுகிறது எந்திரம்!

 
தேர்தல் வாக்குப்பதிவு தேர்தல் வாக்குப்பதிவு

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான மகுட சூட்டல் திருவிழா இன்று காலை 7 மணிக்குத் தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடாக, மாநிலம் முழுவதும் உள்ள 75,064 வாக்குச்சாவடிகளிலும் இன்று அதிகாலை 5:30 மணி முதலே அதிகாரிகள் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கினர். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஏஜெண்டுகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஒவ்வொரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலும் குறைந்தது 50 வாக்குகள் பதிவு செய்யப்பட்டு, அந்தப் பதிவுகள் விவிபேட் இயந்திரத்தில் சரியாகப் பதிவாகிறதா எனச் சோதனை செய்யப்பட்டது. ஏஜெண்டுகளின் திருப்திக்குப் பிறகு, மாதிரி வாக்குப்பதிவு தரவுகள் அழிக்கப்பட்டு, இயந்திரங்கள் 'சீல்' வைக்கப்பட்டன. சரியாகக் காலை 7 மணிக்கு மக்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்த ஏதுவாக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

கர்நாடகா தேர்தல் வாக்குப்பதிவு பெண்கள் முதல் வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு

அதிகாலை முதலே பல வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, கோடை வெயிலுக்குப் பயந்து காலை நேரத்திலேயே வாக்களிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் முதியவர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் திரண்டுள்ளனர். பாதுகாப்புப் பணியில் லட்சக்கணக்கான போலீசாரும், துணை ராணுவப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் தமிழகமே இன்று தேர்தல் கோலம் பூண்டுள்ளது.

அதிகாலை 5:30 மணிக்கு அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது. மின்னணு இயந்திரங்களின் துல்லியம் மற்றும் விவிபேட் ரசீதுகள் அதிகாரிகளால் சரிபார்ப்பு. மாதிரி வாக்குப்பதிவு முடிந்தவுடன் இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு தயார் நிலை. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதால் மக்கள் வரிசையில் காத்திருக்க துவங்கியுள்ளனர். 

வாக்குப்பதிவு வாக்காளர்கள்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நீங்கள் பட்டனை அழுத்தியவுடன், உங்கள் வாக்கு யாருக்குப் பதிவானது என்பதை விவிபேட் இயந்திரத்தில் உள்ள கண்ணாடித் திரை வழியாக 7 விநாடிகள் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.