#BREAKING: ஜெம் வீரமணிக்கு அக்.9 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு - போக்சோ நீதிமன்றம் உத்தரவு!
Updated: Sep 25, 2026, 17:54 IST
பாலியல் மற்றும் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜெம் வீரமணிக்கு, நீதிமன்றக் காவலை அக்டோபர் 9ஆம் தேதி வரை நீட்டித்துச் சிறப்புப் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெம் வீரமணி, பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்படுவதற்குப் பதிலாக, காணொளிக் காட்சி வாயிலாக நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த சிறப்புப் போக்சோ நீதிமன்ற நீதிபதி, ஜெம் வீரமணியின் நீதிமன்றக் காவலை வரும் அக்டோபர் 9ஆம் தேதி வரை நீட்டித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

இதற்கிடையே, இவ்வழக்கில் தொடர்புடைய உதவியாளர் சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்மன் ஆகிய இருவருக்கும் கடந்த தினம் 3 நாட்கள் காவல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
