#BREAKING: மதுராந்தகம், தாராபுரம், தட்டாஞ்சாவடியில் வாக்குப்பதிவு தொடங்கியது... காலையிலேயே ஆர்வமுடன் குவிந்த வாக்காளர்கள்!

 
வாக்குப்பதிவு தேர்தல்

தமிழகத்தின் மதுராந்தகம், தாராபுரம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் தட்டாஞ்சாவடி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முன்னாள் எம்எல்ஏக்களின் ராஜினாமா காரணமாக காலியாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையிலேயே வாக்காளர்கள் ஆர்வமுடன் குவிந்து வருகின்றனர். இன்று மாலை 6 மணி வரை இந்த வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

மதுராந்தகம் (தனி): தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் உட்பட மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மதுராந்தகம் தாராபுரம் இடைத்தேர்தல்

தாராபுரம் (தனி): தவெக சார்பில் சத்தியபாமா, அதிமுக சார்பில் பானுமதி, திமுக சார்பில் சுகன்யா, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் லட்சுமணன் உட்பட மொத்தம் 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

மதுராந்தகம் தொகுதியில் 285 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்த வாக்காளர்கள் 2,13,788 பேர். தாராபுரம் தொகுதியில் 320 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்த வாக்காளர்கள் 2,23,306 பேர்.

வாக்குப்பதிவு தேர்தல்

தேர்தல் பாதுகாப்புப் பணியில் மதுராந்தகத்தில் மட்டும் 2,614 காவல்துறையினரும், 480 மத்திய ஆயுதப்படை போலீசாரும் களமிறக்கப்பட்டுள்ளனர். தாராபுரத்தில் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட தட்டாஞ்சாவடி தொகுதியிலும் இன்று பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த இடைத்தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வரும் அக்டோபர் 9ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. முன்னணித் கட்சித் தலைவர்களின் தீவிரப் பிரச்சாரத்திற்குப் பிறகு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருவது அரசியல் வட்டட்டத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.