BREAKING: "ரவுடி தொப்பை கணேஷ் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை... அதிகாலையில் பரபரப்பு!

 
தொப்பை கணேஷ் தொப்பை கணேஷ்

சென்னையில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி 'தொப்பை' கணேஷ் இன்று அதிகாலை காவல்துறையினரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாதவரம் பகுதியில் மறைந்திருந்த பிரபல ரவுடி தொப்பை கணேஷைப் பிடிக்க முயன்ற போது, அவர் போலீசாரைத் தாக்கியதால் தற்காப்புக்காகப் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்தார்.

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ₹25 லட்சம் ரொக்கம் மற்றும் 15 சவரன் நகை கொள்ளை வழக்கில் தொப்பை கணேஷிற்குத் தொடர்பு இருப்பது போலீசாருக்குத் தெரியவந்தது. இதுமட்டுமின்றி, அவர் மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி மற்றும் ஆள் கடத்தல் எனப் பல்வேறு மாவட்டங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. தலைமறைவாக இருந்த இவரைப் பிடிக்கக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர்.

தொப்பை கணேஷ்

இந்நிலையில் இன்று அதிகாலை மாதவரம் பகுதியில் தொப்பை கணேஷ் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், தனிப்படை போலீசார் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்தனர். போலீசார் அவரைச் சரணடையுமாறு எச்சரித்தபோது, அவர் தப்பியோட முயன்றதோடு, மறைத்து வைத்திருந்த அரிவாளால் போலீசாரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த போலீசாரைக் காப்பாற்றவும், தற்காப்புக்காகவும் காவல்துறையினர் தொப்பை கணேஷை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர்.

துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில் பலத்த காயமடைந்த அவர், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

பள்ளி மானவி தற்கொலை

குற்றவாளிகளைக் கைது செய்யச் சென்றபோது, சட்டத்தை மதிக்காமல் காவல்துறையினரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதால் வேறு வழியின்றி இந்தத் தற்காப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் காவல் துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தைத் தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.