BREAKING: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமநாதபுரம் மாவட்டத்திலும், நீலகிரி மாவட்டத்தின் 4 வட்டங்களிலும் உள்ள பள்ளிகளுக்கு இன்று அக்டோபர் 26, திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள அர்னாப் புயல் காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. தொடர் மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கனமழையின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு குன்னூர், உதகை, கோத்தகிரி மற்றும் குந்தா ஆகிய 4 தாலுகாக்களில் (வட்டங்களில்) உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வெள்ளப்பெருக்கு மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக கோவை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மழையின் நிலவரத்தைப் பொறுத்து பிற மாவட்ட ஆட்சியர்களும் சூழலுக்கு ஏற்ப முடிவெடுப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
